இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 May 2025 9:26 AM IST
திருச்செந்தூர்: ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேக விழா
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று பந்தல் கால் மற்றும் பூமி பூஜை விழா நடைபெற்றது.
- 18 May 2025 9:10 AM IST
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் மழையின்போது 50 கி.மீ வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 18 May 2025 9:10 AM IST
2 நாட்கள் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு
ரூ.1000 கோடி முறைகேடு விவகாரத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் இல்லம் உள்பட சென்னையில் 8 இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 18 May 2025 9:08 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திருப்பதியில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
- 18 May 2025 9:08 AM IST
பிறந்த குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த சம்பவத்தில் கல்லூரி மாணவியின் காதலன் சிலம்பரசன் கைது செய்யப்பட்டார்.நர்சிங் மாணவி தனக்குத் தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி புதைத்துள்ளார். புதைக்கப்பட்ட இடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்ட அவ்வழியே சென்ற பெண், உடனடியாக குழியைத் தோண்டி உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
- 18 May 2025 9:07 AM IST
ஆந்திரா: பிலேரு - சதும் சாலையில் குரவப்பள்ளி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு ஒருவர் உயிர் தப்பினார். கர்நாடகாவைச் சேர்ந்த திப்பாரெட்டி சுனில், சிவண்ணா, லோகேஷ், கங்குலையா ஆகிய நான்குபேரும் ஆந்திராவில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சமையல் செய்யச் சென்றபோது விபத்துக்குள்ளானது. நீச்சல் தெரிந்ததால் சுனில் உயிர் தப்பினார்.
- 18 May 2025 9:07 AM IST
ஈரோடு: சிவகிரி அருகே விளக்கேத்தியில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 18 May 2025 9:06 AM IST
தேனி: கும்பக்கரை அருவியில் காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது













