இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Oct 2025 4:48 PM IST
சர்வதேச டி20 கிரிக்கெட்: 86 இன்னிங்ஸ்.. 150 சிக்சர்.. சூர்யகுமார் யாதவ் மாபெரும் சாதனை
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்தபோது மறுபடியும் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை கொட்டியதால் அத்துடன் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அப்போது சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடனும் (24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன் கில் 37 ரன்களுடனும் (20 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
- 30 Oct 2025 4:45 PM IST
”தமிழர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான்..” வைகோ திடீர் புகழாரம்
பசும்பொன்னில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்திக்கவிருந்தபோது, அவ்விடத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். அப்போது அவரை சீமான் வரவேற்றார். இருவரும் ஆரத்தழுவி அன்பை பரிமாரிக்கொண்டனர். இதையடுத்து சீமானை புகழ்ந்து வைகோ செய்தியாளர்களிடையே பேசியதாவது;
”இளையோர் உள்ளங்களில் புயல் வீசி வரும் செந்தமிழன் சீமானை பசும்பொன்னில் சந்தித்தது மகிழ்ச்சி. லட்சக்கணக்கான தமிழர்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர் சீமான். நான் மருத்துவமனையில் இருந்தபோது சீமான் வந்து பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கவலையோடு நான் விசாரிப்பேன். என் அம்மா இறந்தபோது கலிங்கப்பட்டி வீட்டிற்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்து விட்டார். இனி எங்கள் பயணம் தொடரும். ஒற்றுமையாக பயணிப்போம். சீமானின் முயற்சிகளும் வெற்றி பெறட்டும்.”
- 30 Oct 2025 4:26 PM IST
‘ஆளுங்கட்சியை தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும்’ - தமிழிசை சவுந்தரராஜன்
எதிர்கட்சிகள் ஒன்றாக கூட்டணியில் இணையும்போது வாக்குகள் பிரியாமல் இருக்கும். வாக்குகள் பிரிந்துவிட்டால், நாம் யாரை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை தவறவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பட்ட கூட்டணி அமைவது நல்லது. தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஆளுங்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்றால் எல்லோரும் இணைய வேண்டும்.”
- 30 Oct 2025 4:24 PM IST
கட்சியில் நடந்த உள்குத்து வேலைகளால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியவில்லை. ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் மூன்று பேருமே தி.மு.க.வின் பி டீம் போன்று செயல்படுகிறார்கள். அவர்கள் 3 பேர் இல்லாத நிலையில், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. பலவீனமடைந்து விட்டது என கூறுவது தவறு. அவர்கள் 3 பேர் ஒன்றிணைவது பற்றி பேசுவதே வீண் என்றார்.
இதேபோன்று, செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்த களைகள் அகற்றப்பட்டு உள்ளன. அதனால், அ.தி.மு.க. நன்றாக செழித்து வளரும். அடுத்து ஆட்சி அமைக்கும். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அ.தி.மு.க.வின் கோட்டையிலேயே, செங்கோட்டையனால் வெற்றி பெற முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
- 30 Oct 2025 4:23 PM IST
திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி - நயினார் நாகேந்திரன்
விளம்பரத் திட்டங்களை அறிவித்து "நலம் காக்கும் ஸ்டாலின்" என்று பெயர்சூட்டி விளம்பரம் தேடுவதற்கு பதில், ஆட்சி முடியும் தருவாயிலாவது மக்கள் உயிரைப் பாதுகாக்கும் விதமாக அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் திமுக அரசு. அது ஒன்று மட்டுமே இதுவரை பல உயிர்களைக் காவு வாங்கி பாவம் புரிந்ததற்குத் தகுந்த பிராயசித்தமாக அமையும்!
- 30 Oct 2025 4:22 PM IST
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை.!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை பிற்பகல் நிலவரப்படி சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பிற்பகலில் மாற்றமின்றி அதே விலையில் தொடர்கிறது.
- 30 Oct 2025 3:34 PM IST
தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் சந்திப்பு
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதிமுக ஒன்றிணைப்பு குறித்த செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
- 30 Oct 2025 3:31 PM IST
தமிழகத்தில் 5-ந்தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (29-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (30-10-2025) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்திற்கு, வடக்கு-வடமேற்கு திசையில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக நகரக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 30-10-2025 முதல் 04-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- 30 Oct 2025 3:25 PM IST
நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நெல் மூட்டைகள் முளைத்திருந்தன. அவற்றை எங்கள் கண் எதிரிலேயே நாங்கள் பார்த்தோம். தினமும் நெல் மூட்டைகள் கொள்முதல் நடந்திருக்கும் என்றால் திறந்த வெளியில் அவை இருந்திருக்காது. தினசரி 2 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தால் அவை தேங்கியிருக்காது.
ஆனால், தினமும் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் என அமைச்சர் தவறான தகவலை கூறியிருக்கிறார். நெல் கொள்முதல் மையங்களை பார்க்காமல், ரெயிலில் மூட்டைகள் ஏற்றப்படும்போது அதனை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்தார்.
- 30 Oct 2025 1:59 PM IST
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
















