5 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட ரெயில்: கன்னியாகுமரியில் பயணிகள் அவதி

ரெயில் சுமார் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால், நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ரெயில்
Published on

நாகர்கோவில்,

அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக தினமும் இரவு 11 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும். ஆனால், சுமார் 10 மணி நேரம் தாமதமாக நேற்று காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த ரெயில் நேற்று மாலை 5.30 மணிக்கு நாகர் கோவில் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றிருக்க வேண்டும்.

இருப்பினும், ரெயில் வருகையில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, இரவு 10.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்றது. ரெயில் சுமார் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால், நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விடுமுறை காலம் என்பதால் ரெயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள், ரெயில் நிலையத்திலேயே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com