தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறுகிறதா விசிக? ; திருமாவளவன் பதில்

9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறுகிறதா விசிக? ; திருமாவளவன் பதில்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில் 108 தொகுதிகளை தவெக கைப்பற்றியது. இதையடுத்து, காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் (2), கம்யூனிஸ்டுகள் (4), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றார். அவருடன் தவெக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இதனிடையே, தவெக அரசின் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, தவெக அரசின் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், தவெக அரசின் அமைச்சரவையில் இணையுமாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து விரைவில் அறிவிப்போம்’ என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com