ஈரோட்டில் 16-ம் தேதி விஜய் பிரசாரம்..?


ஈரோட்டில் 16-ம் தேதி விஜய் பிரசாரம்..?
x

மக்கள் சக்தி விஜய்யை அரியணையில் அமர்த்தும் என்று செங்கோட்டையன் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த பிரசாரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார்.

இருப்பினும் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூறினார். இருப்பினும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாக அரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தினார்.

இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவருக்கு நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கூடுதலாக ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்படுள்ளார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வருகிற 16-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. பிரசார பயணத்திற்கு அனுமதி கோரி ஈரோடு ஆட்சியர் கந்தசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் மனு அளித்துள்ளார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் செங்கோட்டையன் கூறியதாவது:-

விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பெருந்துறை சாலையில் வாரி மஹால் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இடத்தில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது அதற்கு உரிய அனுமதி பெற்றவுடன் பணிகள் விரைந்து நடக்க நடத்தப்படும்.

அரசு என்ன விதிமுறைகள் சொல்கிறார்களோ அதை நிறைவு செய்து வெற்றிகரமாக நிகழ்ச்சி நடத்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். ரோட் ஷோ தவிர்க்கப்பட்டுள்ளது தனியார் இடத்தில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எதிர்கால தமிழகத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தி விஜய்யை அரியணையில் அமர்த்தும். தமிழகத்தில் திருப்புமுனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது பெரிய மாற்றம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story