தமிழகத்தில் விஜய் மீண்டும் சுற்றுப்பயணம்; தேதி அறிவித்த செங்கோட்டையன்

கரூர் சம்பவத்திற்கு பிறகு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உள்ளரங்கு கூட்டத்தில் மட்டுமே விஜய் பங்கேற்றுள்ளார்.
ஈரோடு,
தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"எதிர்கால தமிழகம், இளைஞர்களின் எழுச்சி நாயகன். மக்கள் எழுச்சியோடு எதிர்காலத்தை உருவாக்க இருக்கும் விஜய், ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு உரிய அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்த நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட இருக்கிறோம். ரோடு ஷோ தவிர்க்கப்பட்டுள்ளது. தனியார் இடம் தேர்வு செய்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மக்கள் சக்தியே விஜயை அரியணையில் அமர்த்தும். மூத்த தலைவர் என்பதால் இன்னொரு கட்சி பற்றி பேசக்கூடாது" என்று கூறினார்.






