மாலை 3 மணி நிலவரப்படி அதிகமான வாக்குகள் பதிவான தொகுதிகள் எவை..?

தமிழக சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாலை 3 மணி நிலவரப்படி அதிகமான வாக்குகள் பதிவான தொகுதிகள் எவை..?
Published on

சென்னை,

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முன்னதாக, தமிழகம் முழுவதும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி அதிக வாக்குபதிவுகள் பதிவாகி உள்ள 5 தொகுதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி மொத்தம் 70 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிக வாக்குகள் பதிவான முதல் 5 தொகுதிகள்:-

குமாரபாளையம் : 80.67

பெருந்துறை : 77.59

பவானி :77.6

அவிநாசி : 77.43

ஒட்டன்சத்திரம் : 77.35

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com