ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: வாலிபர் கைது

சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் பணம் இருந்த பெட்டியையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை முயற்சி
Published on

சென்னை,

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி:

சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. மர்ம நபர்கள் 2 பேர் இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் பணம் இருந்த பெட்டியையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

வாலிபர் கைது:

ஆனால் அவர்களால் உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் தப்பிச்சென்றனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது. இதுகுறித்து வங்கி மேலாளர் விக்னேஷ் அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆவடியைச் சேர்ந்த விஜய் (வயது 23) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com