கஞ்சா போதையில் தாத்தா, பாட்டியை கொன்று எரித்த வாலிபர் - திருவாரூரில் பரபரப்பு

வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ஐயப்பன், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
கஞ்சா போதையில் தாத்தா, பாட்டியை கொன்று எரித்த வாலிபர் - திருவாரூரில் பரபரப்பு
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி ஐயப்பன்(வயது 32). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

இந்த நிலையில், கஞ்சா போதை அதிகமாகி, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது தாத்தா பிச்சமுத்து மற்றும் பாட்டி சந்திராவை மதுபாட்டில் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களின் உடல்களை தீவைத்து எரித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து, ஐயப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com