தமிழகத்தில் 13 இடங்களில் இன்று வெயில் சதம்

அதிகபட்சமாக திருச்சியில் 104.18° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 13 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-

திருச்சி - 104.18° பாரன்ஹீட் (40.1°C)

வேலூர் - 103.46° பாரன்ஹீட் (39.7°C)

மதுரை நகரம் - 103.28° பாரன்ஹீட் (39.6°C)

மதுரை விமான நிலையம் - 102.2° பாரன்ஹீட் (39.0°C)

பாளையங்கோட்டை - 102.02° பாரன்ஹீட் (38.9°C)

சென்னை மீனம்பாக்கம் - 101.84° பாரன்ஹீட் (38.8°C)

திருத்தணி - 101.48° பாரன்ஹீட் (38.6°C)

ஈரோடு - 100.4° பாரன்ஹீட் (38.0°C)

கரூர் பரமத்தி - 100.4° பாரன்ஹீட் (38.0°C)

நாகப்பட்டினம் - 100.4° பாரன்ஹீட் (38.0°C)

பரங்கிப்பேட்டை - 100.4° பாரன்ஹீட் (38.0°C)

தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0°C)

சென்னை நுங்கம்பாக்கம் - 100.04° பாரன்ஹீட் (37.8°C)

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com