10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று (05.10.2025 - ஞாயிற்றுக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய சக்தி தீவிர புயல் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது குஜராத்தின் துவாரகாவில் இருந்து மேற்கே சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






