பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 32 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு

ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ்.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 32 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு
Published on

மணாலி,

ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டின் மைண்டனோ தீவை மையமாக கொண்டு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

37 பேர் பலி

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, நிலநடுக்கத்தால் மைண்டனோ நகரமே நிலைகுலைந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com