பிரேசிலில் கனமழை, வெள்ளம் - 6 பேர் பலி

கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரேசிலில் கனமழை, வெள்ளம் - 6 பேர் பலி
Published on

பிரேசிலா,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பெர்னம்புகோ, பரைபா ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் பல நகரங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com