ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த மேலும் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த மேலும் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த மேலும் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
Published on

டெஹ்ரான்,

ஈரானில் இந்தாண்டு தொடக்கத்தில் அரசுக்கு எதிராக போராட் டங்கள் வெடித்தது. அப்போது இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் உடன் இணைந்து அந்த நாட்டினரில் சிலர் செயல்பட் டதாக புகார் எழுந்தது.

இங்கிருந்தபடி அவர்கள் இஸ்ரேல் நாட்டுக்கு துப்பு கொடுத்து அவர்களின் கட்டளைகளுக்கு தகுந்தாற் போல போராட்டக்காரர்களுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் தேவையான ஆயுதங்களை வினியோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று அதிகாலை இஸ்பஹான் நகரில் எர் பான் கியானி என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கியானி மொசாட் அமைப்பால் பணியமர்த்தப்பட்டவர் என்றும், அந்த அமைப்பின் பணிகளைச் செய்ய அவர் நியமிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மொசாட் அமைப்பினருடன் தொடர்புடையதாக கூறி ஈரான் அணுசக்தி அமைப்பின் முன்னாள் ஊழியர் உள்பட 4 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com