

* ஈராக் நாட்டின் நஜாப் நகருக்கான 4 வாராந்திர விமான சேவைகளை பாதுகாப்பு காரணங்களையொட்டி நிறுத்தி வைத்து உள்ளதாக ஜோர்டான் அறிவித்து உள்ளது.
* பாகிஸ்தானில் 25ந் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சியான மில்லி முஸ்லிம் லீக் (எம்.எம்.எல்.) கட்சியின் பேஸ்புக் கணக்குகளை அந்த சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி விட்டது. இது ஹபீஸ் சயீத் கட்சிக்கு பின்னடைவாக அமைந்து உள்ளது.
* ஏமனில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக இந்த நில நடுக்கம் பதிவானது. அதன் சேதங்கள் குறித்து தகவல் இல்லை.
* 2020ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தி மெயில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர், நான் மீண்டும் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என குறிப்பிட்டார்.