ஹண்டா வைரசை தொடர்ந்து மற்றொரு சொகுசு கப்பலில் நோரா வைரஸ் பரவல்

அதிக தொற்றும் தன்மை கொண்டது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது.
ஹண்டா வைரசை தொடர்ந்து மற்றொரு சொகுசு கப்பலில் நோரா வைரஸ் பரவல்
Published on

புளோரிடா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் எவர்கிளேட்ஸ் பகுதியில் இருந்து சொகுசு கப்பல் ஒன்று கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில், கப்பலில் இருந்தவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கப்பலில் இருந்த 3,116 பேரில் 102 பயணிகள், 13 ஊழியர்கள் என 115 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

அவர்களுக்கு வாந்தி, பேதி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன. அந்த கப்பல் நாளை போர்ட் கேனவரல் பகுதிக்கு திரும்ப உள்ளது. இது அதிக தொற்றும் தன்மை கொண்டது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த பாதிப்பானது, தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து விரைவாக மற்றொரு நபருக்கு பரவும். கலப்பட உணவு, தண்ணீர் அல்லது மேற்பரப்பு ஆகியவற்றின் வழியே தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது. சிலருக்கு வயிற்று வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் ஆகிய பொதுவான அறிகுறிகளும் இருந்துள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com