கனடாவில் சிறுவனை கடத்திய வழக்கில் இந்தியருக்கு 18 மாதங்கள் சிறை

ஒண்டாரியோவில் உள்ள தெசலோன் பகுதியில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், 9 வயது சிறுவனுக்கு ஐஸ்கிரீம், விளையாட்டுப் பொருட்களைக் காட்டி ஆசை வார்த்தை கூறி தனது வாகனத்தில் கடத்திச் சென்றார்.
கனடாவில் சிறுவனை கடத்திய வழக்கில் இந்தியருக்கு 18 மாதங்கள் சிறை
Published on

ஒட்டாவா,

இந்தியாவை சேர்ந்த மனோஜ் கோவிந்தபாலுநிகம் (வயது 37) என்பவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஒண்டாரியோவில் உள்ள தெசலோன் பகுதியில், 9 வயது சிறுவனுக்கு ஐஸ்கிரீம் மற்றும் விளையாட்டுப் பொருட்களைக் காட்டி ஆசை வார்த்தை கூறி தனது வாகனத்தில் கடத்திச் சென்றார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் (1½ ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிந்த பிறகு, கனடா குடியேற்றத் துறை அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com