அமெரிக்காவில் இந்திய வாலிபர் தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை

அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நேற்று வரை ரூ.56.90 லட்சம் நிதி திரண்டுள்ளது.
அமெரிக்காவில் இந்திய வாலிபர் தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை
Published on

கர்னூல்

ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சந்து இராகனாபொய்னா (வயது 26). அமெரிக்காவிற்கு மேல்படிப்பு படிப்பதற்காக சென்ற இவர், சிகாகோ நகரில் உள்ள டேபால் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை கடந்த ஆண்டு மார்ச்சில் முடித்து விட்டு, ஜூன் மாதத்தில் டெல் நிறுவனத்தில் கணினி பிரிவில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்துள்ளார். பண நெருக்கடி காரணம் என கூறப்படுகிறது. இதுபற்றி அவருடைய நண்பர் ராஜேஷ் குர்ராம் நிதி திரட்டுவதற்காக வெளியிட்ட செய்தியில், பல சர்வதேச மாணவர்களை போன்று நம்பிக்கை மற்றும் நோக்கம் ஆகியவற்றுடன் பெரிய கனவுகளுடன் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தவர் சந்து.

அற்புத மனிதர். பெருந்தன்மையான, பழகுவதற்கு இனிமையான மற்றும் நண்பர்களுக்கும், இளைய சகோதரருக்கும் ஆதரவாக இருந்தவர். ஆனால், பெரிய அளவில் தாங்க முடியாத சவால்களை எதிர்கொண்டார் என தகவலை பகிர்ந்து உள்ளார்.

அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நேற்று வரை ரூ.56.90 லட்சம் நிதி திரண்டுள்ளது. சந்துவின் மரணத்திற்கான காரணம் பற்றி உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com