பாகிஸ்தான் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய ஏவுகணை சோதனை

பாகிஸ்தானின் இந்த ராணுவ நடவடிக்கை அண்டை நாடுகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய ஏவுகணை சோதனை
Published on

இஸ்லாமாபாத்.

பாகிஸ்தான் கடற்படை தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட அதிநவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. கராச்சி கடல் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில், நீண்ட தொலைவில் இருந்த இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது.

இந்த ஏவுகணை, எதிரிகளின் தாக்குதல்களைச் சாதுர்யமாகத் தவிர்த்து, இலக்கை நோக்கித் துல்லியமாகப் பாயும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. கடல் மட்டுமின்றி நிலப்பரப்பில் உள்ள இலக்குகளையும் தாக்கும் வல்லமை படைத்தது. பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட் மிரல் நவீத் அஷ்ரப் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே போன்ற சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ் தானின் இந்த ராணுவ நடவடிக்கை அண்டை நாடுகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com