ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாடு நேற்று தொடங்கியது.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்
Published on

மாஸ்கோ,

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் மீது உக்ரைன் நேற்று அதிகாலை மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாடு நேற்று தொடங்கிய நிலையில், இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அதிபர் புதின் நாளை (வெள்ளிக்கிழமை) உரையாற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் எல்லையிலிருந்து ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்த டிரோன்கள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தாக்கின. இதனால் அங்கு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு. கரும்புகை சூழ்ந் துள்ளது. ரஷியாவின் பால்டிக் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள குரோன்ஸ்டாட் கடற்படைத் தளமும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக புல்கோவோ சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். முன்னதாக உக்ரைன் தலைநகரமான கீவ் மீது ரஷியா நடத்திய பயங்கர தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com