விநாயகரை வரவேற்க வந்த அன்னப்பறவை கூட்டம்; வைரலான வீடியோ

இதனால், நீர் மாசுபாடு உச்சமடைந்து உள்ளது என்றும், கணேசன் இதனை விரும்புவார் என நீங்கள் நினைக்கிறீர்களா? என மற்றொருவரும் பதிவிட்டு உள்ளனர்.
லண்டன்,
விநாயகர் சதுர்த்தி திருவிழா இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அதிலும், விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன்படி, இங்கிலாந்து நாட்டின் ஆற்றில், இந்தியாவை சேர்ந்த பக்தர்கள், பாரம்பரிய உடையணிந்து படகு ஒன்றில் சென்று விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்தனர்.
அப்போது, விநாயகரை வரவேற்கும் வகையில் அன்னப்பறவைகள் அந்த ஆற்றின் மேற்பரப்பில் நீந்தியபடி படகை நோக்கி வந்தன. வெண் நிறத்தில் அழகாக அவை நீந்தி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை சந்தீப் அந்த்வால் என்பவர் அவருடைய இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.
இதனை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதில் ஒருவர், தண்ணீர் மாசுபாடு உச்சமடைந்து உள்ளது என்றும், கணேசன் இதனை விரும்புவார் என நீங்கள் நினைக்கிறீர்களா, வீட்டிலேயே இதனை செய்து, அந்த நாட்டை தயவு செய்து மதியுங்கள் என மற்றொருவரும் பதிவிட்டு உள்ளனர்.
எனினும், நண்பர்களே... போலீசாருக்கு இது தெரியும்... களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைதான் அது... அதனால், நாடு கடத்தவோ அல்லது கைது நடவடிக்கையோ தேவைப்படாது. பாப்பா பார்த்து கொள்வார் என பதிவிட்டு உள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 நாட்கள் விசேஷம் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் விநாயகருக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து பக்தியுடன் வழிபாடு நடத்துவர். இதனை தொடர்ந்து இறுதி நாளில் ஆனந்த சதுர்த்தி கொண்டாடப்படும். இதனையடுத்து, விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் கொண்டாட்டங்கள் நடைபெறும். இதன்படி, ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டங்கள் நேற்று இரவு வரை நீடித்தன.






