இனி வாட்ஸ் அப்பில் ரீசார்ஜ் செய்யலாம் – அறிமுகமான சூப்பர் வசதி

வாட்ஸ் அப்பில் பல்வேறு புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

இனி வாட்ஸ் அப்பில் ரீசார்ஜ் செய்யலாம் – அறிமுகமான சூப்பர் வசதி
Published on

சமூக வலைத்தளங்களில் மிகவும் தவிர்க்க முடியாத செயலியாக இருப்பது வாட்ஸ் அப் தான். இந்தியாவில் மட்டும் 51 கோடிக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகள் உள்ளன. 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பை 2014 ஆம் ஆண்டு மெட்டா நிறுவனம் வாங்கியது. அதன்பிறகு வாட்ஸ் அப்பில் பல்வேறு புதுப்புது அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

ஆடியோ, வீடியோ கால் வசதி, கோப்புகளை அனுப்பும் வசதி என வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றம் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் யுபிஐ வசதியும் உள்ள நிலையில், தற்போது பயனர்களை கவரும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப் யுபிஐயில் மொபைல் போன் ரீசார்ஜ்களை செய்து கொள்ளும் வசதி அறிமுகமாகியுள்ளது. ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஆகிய நிறுவனங்களின் சிம் கார்டுகளுக்கு வாட்ஸ் அப் யுபிஐயிலேயே ரீசார்ஜ் செய்யலாம். பிஎஸ்.என்.எல். பயனர்களுக்கு விரைவில் இந்த வசதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com