திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
Published on

திருத்துறைப்பூண்டியில் உள்ள முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் 79-ம் ஆண்டு பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று திருத்துறைப்பூண்டி மலர் வணிகர்கள்- தொழிலாளர்கள் சங்க மண்டகப்படியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு முள்ளாட்சி மாரியம்மன் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகையன், மலர் வணிகர்கள்- தொழிலாளர்கள் சங்க தலைவர் காளிதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com