திருச்செந்தூர் ஆவணி திருவிழா.. வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளிய சண்முகர்

சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருச்செந்தூர் ஆவணி திருவிழா.. வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளிய சண்முகர்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அவ்வகையில், 7-ம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையின் கட்டளை மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com