'பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பது மிகவும் கடினம்' - மல்லிகார்ஜுன கார்கே


பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பது மிகவும் கடினம் - மல்லிகார்ஜுன கார்கே
x

பிரதமர் மோடி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது மிகவும் கடினம் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

பாட்னா,

நாட்டில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தால் மத்திய அரசின் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இது குறித்து பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது;-

"நான் நேற்றைய தினம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டேன். அதே சமயம் தெலுங்கானாவில் பிரதமர் மோடியும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது பேச்சில் இருந்த கர்வமும், பெருமையும் இப்போது இல்லை.

பிரதமர் மோடி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது மிகவும் கடினம். நாட்டில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தால் மத்திய அரசின் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

நாட்டில் உள்ள ஏழை மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. அமைப்புசாரா தொழிலாளர்கள் பலன் பெறும் வகையில் தொழிலாளர் சட்டங்களை காங்கிரஸ் வலுப்படுத்தும். மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி வழங்கும்."

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.


Next Story