கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
கோவை,
Live Updates
- 18 March 2024 7:59 PM IST
கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
பிரதமர் மோடி இன்று கோவை கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நிகழ்ச்சி நடத்தினார். கர்நாடகாவில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று மாலை கோவை வந்தார்.
விமான நிலையத்தில் இருந்து காரில் சாய்பாபாகாலனிக்கு பிரதமர் மோடி சென்றார். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே இருந்து பிரதமர் மோடியின் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி தொடங்கியது. சாய்பாபாகாலனியில் இருந்து புறப்பட்ட வாகன பேரணி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவைந்தது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து, இரவு கோவையில் தங்கும் பிரதமர் மோடி நாளை காலை கேரளா செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- 18 March 2024 6:28 PM IST
பிரதமர் மோடியின் வாகனப்பேரணிக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியின் வாகனப்பேரணியில் ஏராளமான பா.ஜ.க.வினர் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி பயணிக்கும் வாகனத்தை நோக்கி மலர்களை தூவி பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
- 18 March 2024 6:19 PM IST
திறந்த வாகனத்தில் நின்றபடி பிரதமர் மோடி பேரணி
கோவையில் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரதமர் மோடி பேரணியில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி பயணிக்கும் அதேவாகனத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகனும் பயணிக்கின்றனர்.
- 18 March 2024 5:42 PM IST
விமான நிலையத்தில் இருந்து சாய்பாபாகாலனி நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து சாய்பாபாகாலனி நோக்கி புறப்பட்டார்.
- 18 March 2024 5:34 PM IST
கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி:-
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பிரதமர் மோடி தமிழ்நாடு, கேரளாவில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்துள்ளார். கர்நாடகாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ள பிரதமர் மோடி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன அணிவகுப்பில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது இது முதல் முறையாகும்.
கோவை விமான நிலையம் வந்துள்ள பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நிகழ்ச்சி நடைபெறும் சாய்பாபாகாலனிக்கு செல்கிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.