தீராத மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்!

கருணைக்கிழங்கு லேகியம், தேற்றான் கொட்டை லேகியம் இவைகளை வகைக்கு ஒரு கிராம் வீதம் காலை இரவு இரு வேளை உண்ண வேண்டும்.
நிலாவாரை சூரணம் ஒரு கிராம் வீதம் இரவு ஒரு டம்ளர் வெந்நீரில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டும்.
துத்திக் கீரையுடன் சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசிய வைத்து இரவு உண்ணலாம்.
சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு எடுத்துக் கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.
இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் நடைப் பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
தண்ணீர் தினமும் குறைந்தது 2-3 லிட்டர் குடிக்க வேண்டும்.
வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.
கிழங்கு வகைகள் மற்றும் காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.