தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது
தீமை அழிந்து நன்மை பிறந்த நாள் தீபாவளி
தீபாவளியன்று புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம்
வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி தீபாவளியை கொண்டாடுவர்
பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவர்
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக தீபாவளி கொண்டாட்டங்கள் தடைபட்டிருந்தது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலகியதையடுத்து தீபாவளி கொண்டாட்டங்கள் மீண்டும் கோலாகலமடைந்துள்ளது
சென்னை தி.நகரில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மக்கள் புத்தாடை, இனிப்புகள் வாங்க தி.நகரில் குவிந்தனர்
தி.நகர் ரெங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
தீபாவளிக்கு ஒருநாளே எஞ்சியுள்ள நிலையில் விற்பனை சூடுபிடித்துள்ளது
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருளை பார்வையிடும் வாடிக்கையாளர்