குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
குஜராத்தில் கடந்த 1-ம் தேதி முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
குஜராத்தில் கடந்த 5-ம் தேதி எஞ்சிய 93 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
குஜராத் 2-ம் கட்ட தேர்தலில் 59.19 சதவீத வாக்குகள் பதிவாகின
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பல கட்சி தலைவர்களும் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன
2 கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
குஜராத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன.
இமாச்சலபிரதேசத்திலும் கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
அத்தேர்தலில் பதிவான வாக்குகளும் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.