22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது
இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் மோதின
லியோனல் மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா களமிறங்கியது
போட்டியின் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி முதல் கோல் அடித்தார்
35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியா 2-வது கோல் அடித்தார்.
இதனால் 2-0 என்ற புள்ளிகள் என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.
ஆனால், ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபோ கோல் அடித்தார்
இதனால், பிரான்ஸ் தனது கோல் கணக்கை தொடங்கியது.
அடுத்த ஒரு நிமிடத்தில் 81-வது நிமிடமே பிரான்ஸ் வீரர் எம்பாபோ 2-வது கோல் அடித்தார்.
இதனால், 2-2 என்ற இரு அணிகளும் சம நிலையில் இருந்தது.
கூடுதல் நேரத்தில் 107-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி கோல் அடித்தார்.
இதனால், 3-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.
ஆனாலும், 118-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் எம்பாபோ கோல் அடித்தார்.
இதனால், 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது.
இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட் முறை அமல்படுத்தப்பட்டது.
பெனால்டி ஷூட்-அவுட் முறையில் அர்ஜென்டினா 4 கோல்கள் அடித்தது
பிரான்ஸ் 2 கோல்கள் மட்டுமே அடித்தது.
இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் மெஸ்சியின் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது.