இந்தி சினிமா துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் துனிஷா சர்மா
20 வயதான துனிஷா சிறுவயதில் கத்ரீனா கைப், வித்யா பாலன் உள்ளிட்டோர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தி சினிமா துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று பிரபலமாகியுள்ளார்.
அலிபாபா தாஸ்தென் - இ - காபுல் என்ற வெப்தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வெப் தொடரில் கதாநாயகனாக நடித்தி வரும் ஷஷென் முகமது கான் மேக்கப் அறைக்கு துனிஷா சென்றுள்ளார். பின்னர், ஷஷென் தனது பகுதி படப்படிப்பு முடிந்தவுடன் அறைக்கு சென்றுள்ளார்.
அறையில் கதவு மூடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த ஷஷென் ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அங்கு நடிகை துனிஷா சர்மா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அவரை மீட்ட படக்குழுவினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
துனிஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.