இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமானவர் ஸ்வப்னா கில்
இவர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவிடம் செல்பி புகைப்படம் எடுக்க கேட்டுள்ளார்.
ஸ்வப்னா செல்பி எடுக்க பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரித்வி ஷாவை தாக்கினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்வப்னாவை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவுக்கு கோர்ட்டு நேற்று ஜாமின் வழங்கியது.
இதையடுத்து ஸ்வப்னா சிறையில் இருந்து வெளியே வந்தார்.
விடுதலையான உடன் பிருத்வி ஷா மீது ஸ்வப்னா புகார் அளித்தார்.
புகாரில், பிரித்வி ஷா மதுபோதையில் தன்னை மானபங்கபடுத்தியதாக ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.
பிரித்வி ஷா மீது 10 பிரிவுகளில் ஸ்வப்னா புகார் அளித்துள்ளார்
எனினும் இது குறித்து பிரித்வி ஷா மீது போலீசார் இன்னும் எந்தவித வழக்குப்பதிவும் செய்யவில்லை.