பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
Jacqueline Fernandez (Instagram)
பணமோசடி வழக்கில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கும் நடிகை ஜாக்குலினுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது
மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாகுலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் கொடுத்துள்ளார்
இது தொடர்பாக ஜாக்குலின் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை ஜாகுலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது
நோட்டீசை தொடர்ந்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஜாகுலின் இன்று ஆஜரானார்
ஆஜரான ஜாகுலினிடம் வழக்கு தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன
விசாரணையில் பணமோசடி தொடர்பாக ஜாகுலினிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது