சைனசைடிஸ் நோயை குணப்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

சிகிச்சை முறைகள்: சுத்தமான உப்பு நீர்க்கரைசலை ஒரு மூக்குத் துளையில் விட்டு இன்னொரு மூக்குத் துளை வழியே வெளியேற்ற வேண்டும்.
நன்றாகக் கொதிக்க வைத்த நீரில் மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்க வேண்டும்
தும்பைப்பூ மலர்களை கசக்கி ஒரு சொட்டு வீதம் இரு மூக்குத்துளைகளிலும் விடலாம்
நீர்க்கோவை மாத்திரையை நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் பற்றிடலாம்.
தடுப்பு முறைகள்: மழைநீரில் நனைந்தாலோ அல்லது தலைக்கு குளித்தாலோ நன்கு ஈரம் காய தலையை துடைத்துக் கொள்ள வேண்டும்
இளவெதுவெதுப்பான வெந்நீர், மிளகு கலந்த பால், சுக்கு கலந்த பால் போன்றவற்றை குடிப்பது நல்லது
ஜன்னலோர பேருந்து பயணம், மின்விசிறி காற்றுக்கு நேராக கீழே படுத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்திக்குரிய கீரைகள், பழங்கள், பால், முட்டை, பயறுவகைகள் போன்றவற்றை தினசரி உட்கொள்ள வேண்டும்.
இரவு ஆறு முதல் ஏழு மணி நேரம் தொடர்ச்சியாக தூங்கவேண்டும். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.