சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடம் வெடிபொருள் வைத்து 9 நொடியில் தூள்தூளாக தரைமட்டமானது.

PTI
நொய்டாவில் இன்று தரைமட்டமாகும் 'இரட்டை கோபுரங்கள்'
'ஏப்பெக்ஸ்' என்ற கட்டிடத்தில் மொத்தம் 32 தளங்கள். 'சியான்' என்ற மற்றொரு கோபுரத்தில் 29 தளங்கள் உள்ளன.
இந்த 2 அடுக்குமாடி கட்டிடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
இந்த 2 அடுக்குமாடி கட்டிடங்களும் இன்று வெடிவைத்து தகர்க்கப்படுகிறது
இரு கட்டிடங்களை தகர்க்க மொத்தம் 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரு அடுக்குமாடி கட்டிடத்தை இடிக்க ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது
அருவி உள்வெடிப்பு முறையில் 2 அடுக்குமாடி கட்டிடமும் 19 விநாடிகளில் தகர்க்கப்படுகிறது
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இரு கட்டிடங்களும் வெடிவைத்து தகர்க்கப்படுகிறது
இரண்டு கோபுரங்களிலும் ஆங்காங்கே துளையிட்டு வெடிபொருட்களை நிரப்பும் பணி கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது. அதில், கட்டிடங்களை வெடிவைத்து தகர்ப்பவர்கள், பயிற்சி பெற்ற ஊழியர்கள் என 40 பேர் பங்கேற்றனர்.
PTI
தகர்ப்பு நிபுணர் சேத்தன் தத்தா ஒரு பொத்தானை அழுத்தியதும் கட்டிடம் வெடித்து தகர்கிறது.
இரட்டை கோபுரத்தின் கட்டுமான சேதங்களை எடுத்துச் செல்ல 1200 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
PTI
கட்டிட இடிபாடுகளால் எழுந்த புழுதியால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் போல துசுபடலமாக காட்சியளித்தது.
PTI