பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் 09 ஆரோக்கிய நன்மைகள்..!
பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஜிங்க் போன்றவை இதில் நிறைந்துள்ளன.
பட்டாணியில் காணப்படும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்கள் உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பட்டாணியில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் இவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
பட்டாணியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கும் வகையில் குடல் வழியாக உணவை நகர்த்த உதவுகிறது.
பட்டாணியில் கரோட்டினாய்டு லுடீன் (carotenoids lutein) மற்றும் ஜியாக்சாண்டின் (zeaxanthin) உள்ளன. இது கண்புரை மற்றும் வயது தொடர்பான ஒளிக்குவியச் சிதைவு போன்ற பிரச்சினைகளை சரி செய்யும்.
ஆக்ஸிஜனேற்றிகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும் கலவை பட்டாணியில் நிறைந்துள்ளது.
பச்சைப் பட்டாணியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், அவை உடல் எடையைக் குறைக்கும் தன்மைகொண்டது.
பட்டாணியில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சருமத்தை மிருதுவாகவும், இளமையாகவும் வைத்திருக்கும் சிறப்பு வாய்ந்தது.
பச்சை பட்டாணியில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகின்றன.