தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அதிக அமிலத்தன்மை இருப்பதால் அதனை இரவில் தவிர்க்க வேண்டும்.
Photo: MetaAI
இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகரிக்கச் செய்யலாம். அதனால் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும்.
Photo: MetaAI
இரவில் மிளகாய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் காரமான உணவுகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். தூக்கத்தை குறைக்கும்.
Photo: MetaAI
இரவில் உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் வயிற்றுவலி மற்றும் தசைப் பிடிப்புகள் ஏற்படலாம்.
Photo: MetaAI
வெறும் வயிற்றிலோ அல்லது தூங்குவதற்கு முன்போ தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தயிர், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தி தூக்கத்தை சீர்குலைத்துவிடும்.
Photo: MetaAI
இரவில் மது அருந்துவது தூக்க சுழற்சிக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். நிம்மதியாக தூங்கி எழ முடியாது.
Photo: MetaAI
கிரீன் டீயில் காபின் உள்ளடங்கி இருப்பதால் அதனை இரவு நேரத்தில் பருகுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதயத்துடிப்பு அதிகரிப்பு, பதற்றம் மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
Photo: MetaAI
துரித உணவுகளுடன் உட்கொள்ள வழங்கப்படும் சாஸ்-ஐ இரவில் தவிர்க்க வேண்டும். அதில் இருக்கும் அமிலம் குடல் ஆரோக்கியத்திற்கு இடையூறை ஏற்படுத்தும்.
Photo: MetaAI
இரவில் வெங்காய சாலட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றில் அழுத்தத்தையும், வாயு தொந்தரவையும் உருவாக்கலாம். தொண்டைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Photo: MetaAI
புதினா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் இரவில் புதினா வகை உணவுகள், புதினா மிட்டாய் சாப்பிடுவது தூக்கத்திற்கு நல்லதல்ல.