பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்கு.. ராணி எலிசபெத் உடலுக்கு 10 லட்சம் பேர் அஞ்சலி

AFP
இங்கிலாந்து நாட்டின் நீண்ட கால ராணி இரண்டாம் எலிசபெத் (வயது 96), செப்டம்பர் 8-ந்தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் காலமானார்.
AFP
இங்கிலாந்து மட்டுமின்றி உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது ராணியின் மரணம்
AFP
ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் மீது கிரீடமும், செங்கோலும் வைக்கப்பட்டன.
AFP
ராணிக்கு திரவுபதி முர்மு உள்ளிட்ட உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
AFP
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி குதிரைகள் பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் வைத்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
AFP
இங்கிலாந்து படை வீரர்களின் பேண்டு வாத்தியங்கள் முழங்க இந்த இறுதி ஊர்வலம் நடந்தது.
AFP
ராணியின் இறுதிச்சடங்கில் அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு உடையில் கலந்துகொண்டனர்.
AFP
ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகளின் முப்படையை சேர்ந்த 6 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர்.
AFP
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் 6 நாடுகளின் மன்னர்கள் மற்றும் ராணிகள் பங்கேற்றனர்.
AFP
முழு அரசு மரியாதையுடன் ராணியின் இறுதிசடங்கு நடைபெற்றது
AFP
ராணியின் இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தை நேரலையில் ஒளிபரப்ப அரச குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
AFP
ராணியின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது 96 வயதை குறிக்கும் வகையில், நிமிடத்துக்கு ஒருமுறை என 96 நிமிடங்களுக்கு பிக்பென் கடிகாரம் தொடர்ந்து ஒலிக்க விடப்பட்டது.
AFP
கணவர் கல்லறை அருகே ராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது
AFP