செவ்வாய் பிள்ளையார் விரதம்
ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொதுஇடத்தில் இடித்து மாவாக்கி, தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் விநாயகர் உருவம் செய்து, புங்கமரக் கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி, அதில் விநாயகரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர். செல்வச் செழிப்புடன் வாழ இந்த பூஜை வழிசெய்வதாக நம்பிக்கை.