12 ராசியினரும் எந்தெந்த தொழில் செய்யலாம்..வாங்க பார்க்கலாம்..!
மேஷ ராசியில் பிறந்தவர்கள் உணவு விடுதி,கட்டிட வேலை, மர வியாபாரம், கல், மண் வியாபாரம், போன்றவற்றை தேர்வு செய்யலாம்.
ரிஷப ராசியினர் மனவியல் கலை, ஜோதிடம், ஆன்மீகம், ஆசிரியர் பணி, ஆராய்ச்சி துறை,ஆலோசனை வழங்குதல் உத்தியோகத்தில் பணி செய்யலாம்.
மிதுன ராசியினர், கல்வித்துறை, ஆன்மீகம், மருத்துவம், நிதித்துறை, கல்வித்துறை, ஓவியர்கள் போன்ற தொழிலில் ஈடுபடலாம்.
கடக ராசியில் பிறந்தவர்கள் அரசு உத்தியோகம்,சமையல் கலை, விவசாயம் போன்றவற்றில் ஈடுபடலாம்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், எழுதுதல், மற்றும் பாட்டு பாடுதல் போன்ற கலைத் தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடலாம்.
கன்னி ராசியை சார்ந்தவர்கள் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை, விண்வெளி துறை,பலவிதமான வியாபாரம் செய்தல்,தூதரகம் போன்ற பணிகளில் ஈடுபடலாம்.
துலாம் ராசியினர் திரவப் பொருட்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல், ஏற்றுமதி இறக்குமதி செய்தல்,கல்வித்துறை போன்றவற்றில் ஆர்வம் செலுத்தலாம்.
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அரசு உத்தியோகம், அரசியல், பிரதம மந்திரி, முதலமைச்சர், நிர்வாகப் பொறுப்பு,போன்றவற்றில் ஆர்வம் செலுத்தலாம்.
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு கணக்கர் தொழில், பலவிதமான வியாபாரம் செய்தல், ஆசிரியர், சில்லரை வியாபாரம் ஆகியன பயன் தரும்.
மகர ராசியைச் சார்ந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் அழகு நிலையங்கள் நடத்துதல் இயல், இசை, நாடகம், பாட்டு மற்றும் கலைத் தொழில்கள் பயன்தரும்.
கும்ப ராசியினருக்கு நெருப்பு சம்பந்தமான தொழில்,ஆராய்ச்சி செய்தல், உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில் பலன் தரும்.
மீன ராசியினர் மர வியாபாரம், ஆன்மீகத்துறை, வங்கித் தொழில், சட்டம் மற்றும் நீதித்துறை போன்றவற்றில் ஆர்வம் செலுத்தலாம்.