கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

தலைநகர் பெங்களூருவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
பெங்களூரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழையால் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து தேவனஹள்ளிக்கு வரும் சாலையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது.
பெங்களூருவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்களும் நகரில் 6 முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.