நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு 6 காரணங்கள்..!
ஊட்டச்சத்து குறைபாடு: அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு முக்கியமான காரணமாகும்.
உடற்பயிற்சி: தினமும் உடற்பயிற்சி செய்ய நேரம் செலவிட வேண்டும். இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக வேலை செய்யாது.
மன அழுத்தம்: இதில் இருந்து மீள்வதற்கான நேரம் அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.
தூக்கமின்மை: ஒழுங்கற்ற தூக்க முறை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.
மது-புகைப்பழக்கம்: இந்த பழக்கம் கொண்டவர்களுக்கு அடிக்கடி நோய் எதிர்ப்பு அமைப்பு ஆல்கஹால் காரணமாக பாதிப்படையும்.
வீட்டுக்குள்ளேயே இருத்தல்: வீட்டில் அடைபட்டு இருப்பதும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும்.