ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் படங்கள்... என்னென்ன தெரியுமா?
சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாகும்.
இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி (இந்திய தேதிபடி மார்ச் 3) நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்காக மொத்தம் 29 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மகாராஜா
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
தங்கலான்
வாழை
கொட்டுக்காளி
ஜமா