78 -வது சுதந்திர தினம்..!
ஆங்கிலேயர்களிடம் இருந்து நமக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்து அனைவருக்கும் தெரியும். இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும் இதற்காக தங்கள் இன்னுயிரை நீத்தவர்களையும் நாம் இந்த நாளில் நினைவு கூறுகிறோம்.
இன்று நமது மூவர்ணக் கொடியை ஏற்றி தேசிய கீதம் பாடி சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
இந்த மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜூலை 22, 1947ம் தேதி நடைபெற்ற அரசியலமைப்புச் சபையின் கூட்டத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மூவர்ணக் கொடியில் மேலே இருக்கும் காவி நிறம் நாட்டின் வலிமை மற்றும் தைரியத்தைக் குறிக்கிறது. நடுவில் உள்ள வெள்ளை நிறம் மற்றும் அசோக சக்கரம் இருக்கும். அது அமைதியையும் உண்மையையும் குறிக்கிறது. கீழே இருக்கும் பச்சை நிறம் வளம், வளர்ச்சியைக் குறிக்கிறது.