90-வது இந்திய விமானப்படை தினம்
இந்தியாவின் வான் வெளியை பாதுகாக்கும் இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியில் பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை இருந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய விமானப்படை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
உலகிலேயே மிகப்பெரிய விமானப்படைகளில் இந்திய விமானப்படை 4-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்திய விமானப்படையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி 90-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
சண்டிகரில் உள்ள சுக்னா ஏரியில் இந்திய விமானப்படை தின விழா நடைபெற்றது.
முப்படைத் தலைவர்களுடன் புது டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தாம்பரம் விமான பயிற்சி மையத்தில் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்
தாம்பரம் விமான பயிற்சி மையத்தில் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்