மனிதர்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளில் ஒன்று குடிநீர். ஆனால், ஆடம்பர பாட்டில் குடிநீர் பயன்பாடு என்பது தற்போது பெருவசதி படைத்தவர்களிடையே உருவாகியுள்ளது.
உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் குடிநீராக, ஜப்பானில் தயாரிக்கப்படும் 'பிலிகோ ஜூவல்லரி வாட்டர்' கருதப்படுகிறது.
இதில் நிரப்பப்படும் நீர், ஜப்பானின் கோபேயில் உள்ள இயற்கை நீரூற்றில் இருந்து பெறப்படுகிறது. இந்த தண்ணீர், மிக உயர்தரமானதாக கருப்படுகிறது.
இந்த தண்ணீரின் விலை ஒரு லிட்டர் ஆயிரத்து 390 டாலர்களாகும். அதாவது இந்திய மதிப்பில் உத்தேசமாக ரூ.1 லட்சத்து 16 ஆயிரம்.
இந்த தண்ணீர் மிகத் தூய்மையானது என்பதுடன், ரொம்ப ஆடம்பரமான பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு வருகிறது.
தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட, உன்னிப்பாக கவனத்துடன் செய்யப்பட்டு வருகின்றன.