சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சூப்பரான கதம்ப சாதம்..!
பல்வேறு காய்கறிகளை வைத்து செய்யும் இந்த கதம்ப சாதம் சூப்பராக இருக்கும். இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : பச்சரிசி, துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள் தூள், திக்கான புளிக்கரைசல், பூசணிக்காய் , மஞ்சள் பூசணிக்காய், கத்தரிக்காய், வாழைக்காய், கேரட், ஊற வைத்த கொண்டைக்கடலை, வேர்க்கடலை வெல்லம் துருவியது ஆகியவை
முதலில் காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
பின் பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் நீர் விட்டு குழைய வேக விட்டு வைக்கவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்த பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொர கொரப்பாகப் பொடிக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி மேலும் ஒரு கப் நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி மற்றும் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வேக விடவும்.
காய்கள் முக்கால் பதம் வெந்ததும் ஊற வைத்து வேக வைத்த கடலைகளைச் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியினையும் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு வெல்லம் சேர்த்து காய்கள் வெந்ததும் வெந்த அரிசி, பருப்பினைச் சேர்த்துக் நன்கு வேக வைக்கவும்.
நன்கு வெந்ததும் தாளிப்பை சேர்த்து இறக்கவும். இப்போது சூப்பரான கதம்ப சாதம் தயார்.