மெக்சிகோ நாட்டில் உள்ள பூங்காவிற்கு ஒரு குடும்பம் சுற்றுலா சென்றுள்ளது.
அங்கு திறந்தவெளியில் இருக்கும் மேசையில் உட்கார்ந்து அவர்கள் உணவு உட்கொள்கின்றனர்.
அப்போது திடீரென வந்த ஒரு கருப்பு கரடி அந்த மேசை மீது ஏறி அவர்கள் வைத்திருந்த உணவை சாப்பிட தொடங்கியது.
அதனைப் பார்த்த அந்த குடும்பத்தினர், பதறி ஓடாமல் தைரியமாக அசையாமல் அப்படியே இருந்தனர்.
அங்கிருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் தின்ற பிறகு அந்த கரடி மேசையில் இருந்து இறங்கி காட்டிற்குள் ஓடியது.
இதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.