ஒருசில சமையல் டிப்ஸ்கள்..!

பால் பொங்கினால் டம்ளரில் சிறிது தண்ணீரை எடுத்து ஊற்றினால் பொங்குவது அடங்கி விடும்.
இஞ்சிபூண்டு அரைக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.
அசைவ இறைச்சிகள் கழுவும் போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராமல் இருக்கும்.
சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.
பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.
வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க முறுமுறுப்பாக இருக்கும். எண்ணெய் தேவை குறைவாகும்.
Explore