நெஞ்செரிச்சல் வராமல் இருக்க ஒருசில வழிமுறைகள்..!
நெஞ்செரிச்சல் பெரும்பாலும் அமில ரிப்ளக்ஸ் காரணமாக ஏற்படுகிறது. இது வயிற்றில் உள்ள அமிலம் மீண்டும் உணவுக்குழாயில் பாயும் போது ஏற்படுகிறது.
நெஞ்செரிச்சலைத் தூண்டும் வகையிலான உணவுகளை தவிர்க்க வேண்டும்.இதில் அமில உணவுகள், கொழுப்பு உணவுகள் போன்றவை அடங்கும்.
சாப்பிட்ட உடனே படுத்துக்கொள்வது நெஞ்செரிச்சல் அபாயத்தை அதிகரிக்கும். இதனால் வயிற்றில் ஈர்ப்பு விசை அமிலத்தைத் தக்கவைக்க முடியாது.
இடுப்பைச் சுற்றி இறுக்கமான ஆடைகள் அணிவதன் மூலம் வயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு நெஞ்செரிச்சல் அபாயத்தை அதிகரிக்கும்.
மன அழுத்தம் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் அபாயத்தை அதிகரிக்கலாம்.
அளவுக்கு அதிகமான உணவை உண்ணுவதால் அவை உணவுக்குழாய் சுழற்சியின் மீது அழுத்தத்தை அதிகரித்து நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.